பிரிந்த காதலியை 75 வருடங்களின் பின்னர் சந்தித்த காதலன்! சுவாரசிய சம்பவம் அரங்கேற்றம்

Report

பிரிந்த காதலியை 75 வருடங்களின் பின்னர் காதலன் சந்தித்துள்ள சுவாரசிய சம்பவம் பிரான்ஸில் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ரொபின்ஸ் (97) என்ற இராணுவ வீரர் அண்மையில் நடைபெற்ற 75-வது D-நாள் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

இதன் போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், 1944ம் ஆண்டு நான் இங்கு வருகை தந்திருந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய ஆடைகளை சலவை செய்வதற்கு ஒரு நபரை நான் தேடிக்கொண்டிருந்தேன்.

எனக்கு உதவி செய்வதாக ஒரு பெண் ஒப்புக்கொண்டார். அந்த இடைப்பட்ட காலத்தில் அவருடைய மகள் ஜென்னீன் பிசர்சன் என்பவர் மீது எனக்கு காதல் மலர்ந்தது.

இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். இரண்டு மாதங்கள் கழித்து அந்த கிராமத்தை விட்டு நாங்கள் வெளியற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று நான் அவளிடம் கூறினேன்.

நான் அங்கிருந்து செல்லும் வரை அவள் அழுதுகொண்டே இருந்தாள். போர் முடிந்ததும் அமெரிக்க திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் என்னால் இங்கு வரமுடியவில்லை. அவளுடைய படத்தை நான் இன்னும் வைத்திருக்கிறேன் என கூறினார்.

மேலும், அந்த பெண்ணின் குடும்பம் பற்றிய தகவல்களை தனக்கு கிடைக்க உதவுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை வைத்தார்.

உடனே விரைந்து செயல்பட்ட ஊடகவியலாளர்கள் முதன்முதலாக அவர்கள் சந்தித்த இடத்திலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் ஜென்னீன் பிசர்சன் இன்னும் உயிருடன் இருப்பதை கண்டறிந்து, ரொபின்சிற்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சந்தித்த இருவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பிசர்சனை கட்டியணைத்த ரொபின்ஸ், நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன். நீ ஒருபோதும் என் இதயத்தை விட்டு வெளியேரவில்லை’ எனக் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய காதலியின் நினைவாக வைத்திருந்த பழைய ஒளிப்படத்தைக் காட்டி, இது உனக்காக எனக்கூறி கொடுத்துள்ளார்.

1602 total views