ஓரினத் திருமணத்திற்கு ஈக்குவடோரில் அனுமதி!

Report

ஓரினத் திருமணத்திற்கு ஈக்குவடோரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈக்குவடோர் அரசமைப்பு நீதிமன்றத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, இடம்பெற்றுள்ள வாக்கெடுப்பில் ஐந்துக்கு நான்கு என்ற கணக்கில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளின் வரிசையில், ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கும் நாடாக ஈக்குவடோரும் இணைந்துள்ளது.

இந்த நிலையில் எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்து மக்களின் மனித உரிமைகளும் அங்கீகரிக்கப்படுவதை, அண்மை முடிவு காட்டுவதாக, சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

1158 total views