ஆப்கானிஸ்தானில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் – 40 தலிபான்கள் உயிரிழப்பு!

Report

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலில் 40 இற்கும் மேற்பட்ட தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாபூல் மாகாணத்தில் டேசுபான் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு படை வீரர்களின் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதனை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் தக்க பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடுமையான துப்பாக்கச் சமர் இடம்பெற்றுள்ளது.

இறுதியில் தலிபான் இயக்கத் தளபதிகள் உள்ளிட்ட 40 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் தொடர்ச்சியாக அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1185 total views