ரஷியாவில் கார் மீது மினி பஸ் மோதி 8 பேர் பலி

Report

ரஷியா நாட்டின் வொரொனஸ் பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வொரொனஸ் - லூஹான்ஸ்க் நெடுஞ்சாலை அருகில் கார் சென்ற போது அங்கு வந்த மினி பஸ் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

422 total views