உலகின் மிகப்பெரிய காபி கோப்பை

Report

உலகிலேயே மிக பெரிய காபி கோப்பை ஒன்று கொலம்பியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் சின்சினா (Chinchina) பகுதியில் காபி அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உள்ளூர் விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அங்கு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது கின்னஸ் சாதனை படைப்பதற்காக 20 டன் வரை காபி நிரம்பும் அளவுக்கு உலகிலேயே பெரிய காபி கோப்பை உருவாக்கப்பட்டது.

அதுமட்டும் அல்லாமல் உலகிலேயே அதிகமானோர் கலந்து கொண்ட காபி சுவைக்கும் நிகழ்ச்சியும் அங்கு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பற்றி கூடுதல் தகவல்களை பெற்ற பிறகு சாதனை குறித்து அறிவிக்கப்படும் என கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பின்சார்பில் இதில் கலந்து கொண்ட நிர்வாகி தெரிவித்துள்ளார்.

531 total views