உறுதியளிக்கப்பட்டதை விட குறைவாகவே நன்கொடை பெற்ற Notre Dame தேவாலயம்!

Report

உறுதியளிக்கப்பட்ட நன்கொடையை விட மிகச் சிறு பங்கினை மாத்திரமே அண்மையில் தீ விபத்தை எதிர் கொண்ட Notre Dame தேவாலயம் பெற்றுள்ளது.

பரிஸிலுள்ள நோட்ரெ டேம் (Notre Dame) தேவாலயத்தின் சீரமைப்புப் பணிகளுக்காக நன்கொடை வழங்க உறுதி வழங்கியவர்கள், தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவார்கள் என்று, தேவாலயத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், நோட்ரெ டேம் தேவாலயம் தீ விபத்தால் கடுமையாகச் சேதடைந்தது.

தீ விபத்தைத் தொடர்ந்து, அதன் சீரமைப்புப் பணிகளுக்காக பல நூறு மில்லியன் வெள்ளி நன்கொடையாக வழங்கப் பல்வேறு தரப்பினர் உறுதி கூறியிருந்தனர். ஆனால், அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே இதுவரை திரட்டப்பட்டுள்ளது.

2918 total views