ஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு!

Report

ஆப்கானிஸ்தானில் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு ஆப்கானிஸ்தான் இராணுவம் போராடி வருகின்றது.

அவர்களுக்கு நேட்டோ படை பக்க பலமாக செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குனர் மாகாணத்தில் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் பதுங்கி குழிகள், ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.

794 total views