சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்!

Report

வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெறுவதற்கு சுமார் 8 லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) கட்டணமாக செலுத்தும் சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா மசகு எண்ணெய் விநியோகத்தை தவிர்த்து வேறு பல முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து ஒரு தொகை கட்டணம் வசூல் செய்து, வருமானத்தை ஈட்ட இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற சுமார் 8 லட்சம் ரியால்களை கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதேபோல், ஓராண்டுக்கு மாத்திரம் சவுதி அரேபியாவில் வசிக்க, 1 லட்சம் ரியால் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இணைய விண்ணப்ப பதிவுகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளன. சவுதி அரேபியாவில் பல ஆண்டுகளாக குடியுரிமை பெறாமல் வசிப்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் தொழில் செய்ய முயற்சிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

913 total views