இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரம் செப்டம்பர் மாதம் ஒப்படைப்பு!

Report

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்கு விவரங்களை, வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைக்கிறது.

இந்த தகவல்களை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதன்படி, இந்தியர்களின் கணக்கு விவரங்களை, வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைக்கிறது.

இது முதல் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு ஆண்டுக்கான கணக்கு விவரங்களும் அடுத்தடுத்து ஒப்படைக்கப்படும். இவற்றில் கணக்கு எண், நிலுவையில் உள்ள பணம், எல்லாவகையான வருமானம் ஆகிய விவரங்கள் இருக்கும்.

கடந்த ஆண்டு, கணக்கை முடித்துக்கொண்ட இந்தியர்களின் விவரங்களும் கிடைக்கும். இந்த தகவல்களை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் தெரிவித்தார். இந்த கணக்கு விவரங்கள், ஒப்பந்தப்படி ரகசியமாக பராமரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

764 total views