தமிழ் சினிமா பாணியில் வாகன ஓட்டுநரை மிரட்டிய சீன பெண்: வைரலான செய்தி

Report

தமிழ் திரைப்படத்தில் வடிவேல் காமெடியில் வருவது போல் போலியாக சீன பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீடு தொகை கேட்டு வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு சீனாவை சேர்ந்தவர் டாங். இவர் கடந்த 4-ஆம் தேதி சைக்கிளில் செல்லும் போது லாரி மோதியதில் விபத்தில் சிக்கினார்.

அப்போது விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் டாங் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.இதை கொடுப்பதற்கு டிரைவர் மறுத்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அப்போது டாங் வலியால் துடிதுடிக்கிறார்.

எனினும், லாரி டிரைவரோ தான் விபத்தை ஏற்படுத்தவே இல்லை என்கிறார். அது போல் டாங்கும் காயமடைந்தது போல் தெரியவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது அந்த காணொளி காட்சிகளை பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு லாரி வரும் போது டாங் தனது சைக்கிளை வேகமாக தூக்கிக் கொண்டு வருகிறார். அப்போது வளைவின்போது அவராகவே மோதி சைக்கிளால் லாரியை உரசுகிறார். அதில் சைக்கிள் கீழே விழுகிறது.

அப்போது, லாரி நிற்கும் சமயத்தில் டாங் ஓடி போய் முன்பக்க டயரில் படுத்துக் கொள்கிறார். உடனே அய்யய்யோ அம்மா என வலியால் துடிப்பது போல் நடிக்கிறார்.

இதை அவ்வழியே போவோர் வருவோர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, அந்த பெண்ணை பொலிஸார் எச்சரித்து அனுப்புகின்றனர்.

இது போல் கருப்பசாமி குத்தகைதாரர் என்ற ஒரு திரைப்படத்தில் வடிவேல் ஒரு தனி குரூப்பையே வைத்திருப்பார். யாராவது ஏமாளியாக வருபவர்களின் வாகனத்தின் முன் ஓடிபோய் படுத்துக் கொண்டு விபத்து ஏற்படுத்திவிடுவது போல் நடிப்பது இழப்பீடு பறிக்கும்படியாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

633 total views