கடலுக்குள் மூழ்கிய கப்பலில் அணுக் கதிர்வீச்சு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை தகவல்!

Report

கடந்த 1989-ஆம் ஆண்டு கடலுக்குள் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவலை நோர்வே ஆய்வாளர்கள் யினை விடுத்துள்ளனர். எனினும், தற்போதைய நிலையில் அந்தக் கதிர்வீச்சின் அளவு குறைவாக உள்ளதால் அந்த வழியாகச் செல்லும் மீன்களுக்கோ, மனிதர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கருத்து வெளியிட்டுள்ள ஆய்வினை முன்னெடுத்த நோர்வே கடல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள்,

நோர்வே கடல் பகுதியில் மூழ்கியுள்ள, சோவியத் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் உதிரி பாகங்கள், காற்று வெளியேறும் பகுதி ஆகியவற்றை சேகரித்து ஆய்வு மேற்கொண்டதில், அதிலிருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளது.

நோர்வே கடல் நீரில் சீசியத்தின் அளவு மிகக் குறைவு என்பதாலும், அந்த நீர்மூழ்கிக் கப்பல் மிக ஆழத்தில் இருப்பதாலும் அந்தக் கதிர்வீச்சின் சக்தி மிக வேகமாக கரைந்துவிடுகிறது.

எனவே, தற்போதைய நிலையில் அங்கு கதிர்வீச்சின் அளவு அபாயகரமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

முன்னாள், சோவியத் யூனியனுக்குச் சொந்தமான கே-278 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தீ விபத்து காரணமாக கடந்த 1989-ஆம் ஆண்டு நோர்வே கடற்பரப்பில் மூழ்கியது.

இந்த விபத்தில், கப்பலில் பயணித்த 69 பேரில் 42 பேர் உயிரிழந்தனர். கப்பலை இயக்கி வந்த அணு உலையும், இரு அணுகுண்டுகளும் அதிலிருந்து இதுவரையில் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

649 total views