நெடுஞ்சாலை-7 ல் அதி பயங்கர வாகன மோதல்! கனேடிய பாதசாரதி உயிரிழப்பு!

Report

கனடாவில், இடம்பெற்ற அதி பயங்கர வாகன மோதலில் சிக்கி பாதசாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகன மோதல், கனடாவின் நெடுஞ்சாலை 7 க்கு அருகிலுள்ள யோங் ஸ்ட்ரீட் மற்றும் கார்டன் அவென்யூ பகுதியில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும், இது தொடர்பில் வேறு எந்த தகவலும் இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

664 total views