தான் இட்ட முட்டைகளைக் காப்பாற்ற பறவை செய்த துணிகர செயல் - மனதை உருக்கும் வைரலான காணொளி

Report

தாய் பாசத்துக்கு இந்த உலகத்தில் எதுவும் ஈடாகாது என்பார்கள். மனிதர்களுக்கு மட்டும் இது பொருத்தமல்ல. மற்ற ஜீவராசிகளுக்கும்தான்.

தான் இட்ட முட்டைகளை, டிராக்டர் ஒன்று ஏற்ற வந்த போது, அதற்கு முன்னர் குதித்து, முட்டைகளைக் காப்பாற்றியுள்ளது தாய் பறவை.

இது சம்பந்தமான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த விஷயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள சி.ஜி.டி.என் செய்தி நிறுவனம், சீனாவில் உள்ள உலாங்காப் நகரத்தில் மனதை உருகச் செய்யும் இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

காணொளியில், காவி நிறத்தில் இருக்கும் ஒரு சிறிய பறவை, தனது இறக்கைகளை விரித்தபடி, ஆக்ரோஷமாக டிராக்டர் முன்னால் குதிக்கிறது.

இதைப் பார்த்த டிராக்டர் ஓட்டுநன், வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போதுதான் பறவை, ஏன் இப்படி நடந்து கொண்டது என்பது புரிந்தது. தனது முட்டைகளைக் காக்கவே தாய் பறவை, அப்படி ஆக்ரோஷமாக நடந்தது என்பதை ஓட்டுநர் உணர்கிறார்.

மேலும், கடுமையான வெப்பத்தை சமாளிக்க அவர் ஒரு பாட்டிலில் நீரையும் பறவைக்கு வைத்துள்ளார்.

8329 total views