பிரான்ஸின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Report

வார இறுதி விடுமுறை நாட்கள் காரணமாக, இல்-து-பிரான்சிற்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இல்-து-பிரான்சிற்குள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை, வீதிக் கண்காணிப்பாளர்களான Smart Bison நிறுவனம் விடுத்துள்ளது.

இன்று, இல்-து-பிரான்சின் பிரதான வீதிகளில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்படும், குறிப்பாக வெளிச் செல்லும் வீதிகளில் மிக நெருக்கடி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு ‘சிவப்பு’ எச்சரிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் இல்-து-பிரான்ஸ் தவிர்த்த ஏனைய மாகாணங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

628 total views