குரேஷியா போராளியை கொன்ற உளவு அதிகாரிக்கு 30 ஆண்டுகள் சிறை!

Report

குரேஷியாவைச் சேர்ந்த போராளியை திட்டமிட்டு படுகொலை செய்த குற்றத்திற்காக ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் உளவு அதிகாரி ஜோசிப் பெர்கோவிச்சுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை ஜெர்மன் அரசு குரேஷியாவிற்கு நாடு கடத்தியது. குரோஷியாவைச் சேர்ந்தவர் யுரேகோவிக், யூகோஸ்லாவியாவின் அரசுக்குச் சொந்தமான ஐ.என்.ஏ எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநராக 1982ம் ஆண்டு வரை இருந்தார். அவர் திடீரென வெளியேறி மேற்கு ஜெர்மனிக்குள் புகுந்தார்.

அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. அப்போது அவர் குரேஷியா தேசியவாத குடியேற்ற குழுக்களுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு வந்தார்.

இதனால், அவரை கொலை செய்ய முடிவு செய்த யூகோஸ்லாவியா அரசாங்கம் அதற்காக சதி திட்டம் தீட்டியது.

அந்த திட்டத்தை யூகோஸ்லாவியாவின் பாதுகாப்பு உளவு பிரிவில் பணியாற்றிய (யூடிபிஏ) ஜோசிப் பெர்கோவிச் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய ஜட்ராவ்கோ முஸ்டாக் ஆகியோர் இதற்கு செயல்திட்டம் வகுத்து கொடுத்தனர்.

இந்த இருவரின் ஏற்பாட்டின் பேரில், 1983ம் ஆண்டு ஜுலை 23ம் தேதி பவேரிய தலைநகர் மியூனிக்கில் ஸ்டெஜ்பான் யூகேராக் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜோசிப் பெர்கோவிச் மற்றும் ஜட்ராவ்கோ முஸ்டாக் ஆகியோருக்கு ஜெர்மன் உச்ச நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ஆயுள்தண்டனை விதித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் உள்ள நீதிமன்றம் இருவருக்கும் சிறை தண்டனையை 30 ஆண்டுகளாக மாற்றியது.

ஏனெனில், ஆயுள் தண்டனை என்ற ஒன்றை குரேஷிய சட்டம் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களை குரேஷியாவுக்கு நாடு கடத்த முடியாது என்பதால் தண்டனையை மாற்றியது.

இதைடுத்து, ஜெர்மன் அரசு உளவாளி ஜோசிப் பெர்கோவிச்சை மற்றும் முஸ்டாக் ஆகியோரை குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்புக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு தனி விமானத்தில் நாடு கடத்தியது.

இதனை அதிகாரப்பூர்வமாக ஜெர்மன் அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் குரோஷியாவிற்கு பெர்கோவிச்சை ஒப்படைப்பது தொடர்பான யூகோஸ்லாவிய குடியரசிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால அதிகார மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

549 total views