திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு தாக்குதல் - ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலி

Report

திருமண நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 4-பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் நகரில் பச்சீரகம் பகுதியில் உள்ளூர் குடிப்படை தளபதி ஒருவரின் இல்ல திருமண விழா இன்று காலை நடைபெற்றது.

இந்நிலையில், திடீரென அங்கு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு எந்தவொரு தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஐ.எஸ்.-கே. என்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை அமைப்பு (ரஷ்யாவால் தடை செய்யப்பட்டது) மற்றும் தலீபான் இயக்கம் ஆகியவை இங்கு தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றன.

456 total views