பார்சல் கொண்டு வந்த ராட்சத உடும்பு: உலகம் முழுவதும் வைரலான புகைப்படம்!

Report

பெரிய ராட்சத உடும்பு ஒன்று பார்சல் ஒன்றை எடுத்து கொண்டு ஒரு வீட்டின் கேட் மேல் ஏறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடும்பு இனங்களிலேயே மிகப்பெரியதான கோமோடோ ட்ராகன் எனப்படும் உடும்புகள் இந்தோனேஷியாவின் தீவுப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன.

மிகப்பெரிய காட்டெருமைகளையே தாக்கி சாப்பிட்டுவிட கூடிய அளவுக்கு பலசாலிகள் இந்த வகை உடும்புகள், காடுகளில் வாழக்கூடிய இவை சில சமயம் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்து அட்டகாசம் செய்வதும் உண்டு.

சிலநாட்களுக்கு முன்பு இந்தோனேசியா தீவு ஒன்றில் உள்ள ஒரு வீட்டு பக்கமாய் போயிருக்கிறது ஒரு உடும்பு. அந்த வீட்டின் முன்பக்க கேட்டின் மீதேறி யாராவது இருக்கிறார்களா என எட்டி பார்த்திருக்கிறது.

அதை பார்த்த அந்த பகுதி நாய்கள் வந்து உடும்பிடம் வம்பு இழுத்திருக்கின்றன. இந்த காட்சியை அந்த பக்கமாக சென்ற சிலர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

சுமார் 8 அடி நீளம் கொண்ட மினி முதலை போல இருக்கும் அந்த உடும்பின் புகைப்படத்தை பதிவிட்ட ஒருவர் எஸ்கியூஸ் மீ சார். எங்கள் கடவுள் மற்றும் மீட்பரான காட்ஸில்லாவிடம் பேச உங்களுக்கு நேரம் இருக்கிறதா? என கேட்டு பதிவிட்டுள்ளார்.

அதற்கு கீழே சிலர் அந்த உடும்பு பார்சல் கொண்டு வருவது போல, ஆன்லைன் உணவு டெலிவரி செய்பவர் போல என விதவிதமான கெட் அப்பில் அந்த கேட்டில் ஏறுவது போல டிசைன் செய்து பதிவிட்டுள்ளனர்.

Excuse me, sir. Do you have time to talk about our lord and savior, Godzilla??? pic.twitter.com/L1GCJ7XS6x— Nyoman Indra K. (@nyombek) July 4, 2019

இந்த புகைப்படம் இந்தோனேசியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வைரலாய் பரவி சிரிப்பலைகளை எழ செய்துள்ளது.

2581 total views