கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்

Report

கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை கணவர் திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எந்த ஆடையை திருடிக் கொடுத்தார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு திருமணமாகிவிட்டது.

மனைவி அந்த மாநிலத்தில் போலீஸில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஜிதேந்திர ராய்க்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கீதா மீதிருந்த மயக்கத்தால் மனைவியை பிரிந்து விட்டு அவருடனேயே வாழ ராய் முடிவு செய்தார்.

ஆனால் வாழ்வதற்கு தேவையான பணத்துக்கு எங்கே போவது என்பது குறித்து ஜிதேந்திர ராய் யோசனை செய்தார்.

அப்போது அவருக்கு வித்தியாசமான யோசனை வந்தது. அதாவது மனைவியின் போலீஸ் சீருடையை திருடி சங்கீதாவுக்கு கொடுத்துவிட்டார்.

அத்தோடு விட்டாரா இந்த ஜிதேந்திர ராய், சங்கீதாவுக்கு போலி அடையாள அட்டைகளையும் ரெடி செய்து கொடுத்துவிட்டார்.

இதை பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்து இவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

இதுகுறித்து மனைவிக்கு தெரியவந்தது. பின்னர் அவர் சங்கீதா மக்களை ஏமாற்றி பணம் பறித்த போது கையும் களவுமாக பிடித்தார்.

அப்படியே இதற்கு காரணமான ஜிதேந்திர ராயையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன

3664 total views