நாடு முழுவதும் தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான வலுக்கும் போராட்டம்!

Report

எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவினால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரு மென அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன், பிரிஸ்ரல், கார்டிஃப், கிளாஸ்கோ மற்றும் லீட்ஸ் ஆகிய நகரங்களில் எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களால் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் ஒரு பகுதியாக கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கொன்கிரீட் தொழிற்சாலையை வாயிலை மறித்து எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு உறுப்பினர்கள் இன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதே அகிம்சையான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டங்களின் நோக்கம் என இக்குழு அறிவித்துள்ளது.

1010 total views