விமானத்தில் இனி ஒளிப்படங்கள் எடுக்க அனுமதி! நிறுவனத்தின் அறிவிப்பால் பயணிகள் உற்சாகம்

Report

Garuda Airlines நிறுவனம் தனது விமானத்தினுள் படமெடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மீட்டுக்கொண்டுள்ளது.

விமானத்தினுள் பயணி ஒருவர் நிறுவனத்தைக் கேலி செய்யும் விதத்தில் படங்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். நிறுவனம் அதைத் தொடர்ந்து விமானத்துக்குள் படமெடுக்கத் தடை விதித்தது.

தடை குறித்த விவரம் இணையத்தில் வேகமாகப் பரவியது. அதை எதிர்த்து இணையவாசிகள் குரல் எழுப்பினர்.

சமூக ஊடகத்தில் செல்வாக்குக் கொண்ட ரியுஸ் வெர்னாண்டஸ் (Rius Vernandes) என்ற நபர் Garuda விமானத்தின் முதல் பிரிவில் சொகுசுப் பயணம் செய்தார்.

அப்போது, கையால் எழுதப்பட்ட, என்னென்ன உணவு வழங்கப்படும் எனக் கூறும் பட்டியலை விமானச் சிப்பந்தி கொடுத்ததாகக் கூறினார்.

அது இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, விமான நிறுவனம் அதற்கு விளக்கமளித்தது. பின்னர், விமானத்தில் படங்கள் எடுக்கக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

விமானப் பயணங்களில் ‘selfie’ எடுத்துப் பதிவு செய்வது பரவலாக பிரபலமாகிவருகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு உலகளவில் மக்களின் எதிர்ப்பு வலுத்தது.

அதனைத் தொடர்ந்து, படம் எடுக்கலாம் ஆனால் சக பயணிகள், சிப்பந்திகள் ஆகியோரின் தனியுரிமையை மதிக்கும் அளவில் படங்களை எடுக்கவேண்டும் என்ற கொள்கைக்கு Garuda நிறுவனம் மாற்றியது.

விமானப் பயணங்களில் படங்கள் எடுப்பது குறித்த கொள்கை, நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடுகிறது.

421 total views