அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வியில் அதிர்ச்சியடைந்த நாடியா முராத்

Report

யாஜிடி இனப்பெண்களுக்காகப் போராடிய நாடியா முராத்திடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘தங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது’ என்று கேட்டதால் நாடியா முராத் சற்றே அதிர்ச்சியடைந்தார்.

மதச் சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவில் 3 நாட்கள் நடந்த மாநாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினர். அவர்களில் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற யாஜிடி இன பெண்கள் போராளி நாடியா முராத்தும் ஒருவர்.

அங்கு பேசிய போது, தன் குடும்பத்தில் தாயும், தனது 6 சகோதரர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாகக் முராத் கூறியுள்ளார். யாஜிடி இனப் பெண்கள் தீவிரவாதிகளால் கொடூரமாக பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட டிரம்ப், “உங்களுக்குத்தானே நோபல் பரிசு கிடைத்தது? அது பாராட்டுக்குரியது. ஆமாம்... உங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் சற்று திகைத்து நின்று பின் சுதாரித்துத் தன் பேச்சைத் தொடர்ந்த நாடியா, பெண் அகதிகளின் மறுவாழ்வுக்காக தாம் உழைத்ததாக கூறினார்.

அதேபோல் ரோஹிங்கிய இனத்தைச் சேர்ந்த பிரதிநிதியையும் ட்ரம்ப்பினால் அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

535 total views