விமானத்திற்குள் இருக்கும் திரைகளை தனது கால்களால் தீண்டிய நபர்

Report

விமானத்திற்குள் இருக்கும் தொலைக்காட்சித் திரைகளை பயணி ஒருவர் தனது கால்களால் தீண்டுவதைக் காட்டும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. விமான பயணத்தின்போது பயணிகள் இந்தத் திரைகளில் தங்களுக்குப் பிடித்தமான காணொளி நிகழ்ச்சிகளை (தங்கள் கை விரல்களால்) தேர்ந்தெடுத்து அவற்றைப் பார்த்து மகிழ்வர்.

வழக்கத்திற்கு மாறான இந்த ஆடவரின் செயல், இணையவாசிகளை அறுவறுப்பில் ஆழ்த்தியது. இந்தக் காணொளி ஒன்பது மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. சம்பவம் எந்த விமானத்தில் நடந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை.

749 total views