இந்தச் சம்பவம் துயரமிக்க ஒரு விபத்து!!

Report

அமெரிக்காவின் யூத்தா மாநிலத்தில் தனது தந்தை அடித்த கோல்ஃப் பந்தால் தலையில் அடிபட்ட சிறுமி உயிரிழந்தார். இவ்வாரம் திங்கட்கிழமை ஏரியா ஹில் என்ற அந்தச் சிறுமிக்கு இந்த அசம்பாவிதம் அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணி அளவில் நடந்தது.

கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரம் இருந்த சிறுமிக்கு இவ்வாறு நடக்கும் என்பதை எவரும் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாது என்று இறந்த சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் துயரமிக்க ஒரு விபத்து என்று போலிசார் வர்ணித்துள்ளனர்.

688 total views