விவாகரத்து கேட்ட மனைவிக்கு இப்படியா செய்வது ?

Report

தன்னிடம் விவாகரத்து கேட்டு வந்த 30 வயது மனைவியைக் குளியலறை தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற அமெரிக்க இந்தியர் கொலைக் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2005ஆம் ஆண்டில் அந்தத் தம்பதியர் திருமணம் செய்தனர். அவ்தார் கிரெவால் தன் மனைவி நவ்னீத் கோரை அடிக்கடி சந்தேகித்து அவரை வெகுவாகக் கட்டுப்படுத்த முயன்றதால், அந்தப் பெண் விவகாரத்து செய்ய முடிவெடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்நேரத்தில் வேறோர் ஆடவருடன் உறவு வைத்திருந்ததையும் நவ்னீத், அவ்தாரிடம் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அந்தச் சண்டை மேலும் மோசமாகி இறுதியில் அவ்தார், நவ்னீத்தின் கழுத்தை நெரித்து அவரைத் தண்ணீர் நிரம்பிய குளியலறை தொட்டிக்குள் மூழ்கடித்துக் கொன்றதாக நீதிமன்றம் உறுதி செய்தது.

770 total views