‘டிக் டாக்’ செயலி தடை செய்ய எச்சரிக்கை! நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Report

ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு அளித்த புகாரின் பேரில், ‘டிக் டாக்’ மற்றும்‘ஹலோ’ ஆகிய இணைய வலைத்தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

அவற்றுக்கு தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் செயலிகள் (ஆப்) மூலம், ஏராளமானோர் தங்கள் திறமைகளை காணொளி எடுத்து பரப்பி வருகிறார்கள்.

இது, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே, இந்த செயலிகள், தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச், பிரதமர் மோடிக்கு புகார் அனுப்பியது.

அதன் பேரில், டிக் டாக், ஹலோ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், 21 விதமான கேள்விகள் அடங்கிய பட்டியலையும் அனுப்பி உள்ளது. அந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காவிட்டால், இரண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

409 total views