ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 35 இராணுவத்தினர் உயிரிழப்பு!

Report

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 35 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இதனால், பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பாதுகாப்பு படையினர் ஆப்கானிஸ்தானின் ஹோர் மாகாணத்திலிருந்து அப் ஹமாரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது, மறைந்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில், 35 பாதுகாப்பு படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ,7 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1175 total views