காபூல் பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி!

Report

காபூல் பல்கலைக்கழகத்தின் வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காபூல் பல்கலைக்கழகத்தின் வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பேர் பலியாகினர்.

பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேவுக்கு எழுவதற்காக வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடித்தத்தாக காபூல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் வெடிக்கும் நிலையிலிருந்த இரண்டாவது குண்டை செயலிழக்கச் செய்ததாக காபூல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் கடந்த ஜனவரி மாதம் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

509 total views