பாராளுமன்றத்தினை இடைநிறுத்துவதற்கு எதிரான தீர்மானம் வெற்றி!

Report

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நடைமுறைப்படுத்துவதற்காக புதிதாகப் பதவியேற்கவுள்ள பிரதமர் பாராளுமன்றத்தினை இடைநிறுத்துவதற்கு எதிரான தீர்மானம் நேற்று மாலை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 9 ஆம் திகதி முதல் டிசெம்பர் 18 ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதியில் பாராளுமன்றத்தினை இடைநிறுத்தக் கூடாது என குறித்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 315 வாக்குகளும் எதிராக 274 வாக்குகளும் கிடைத்திருந்தன. இதன் மூலம் 41 மேலதிக வாக்குகளால் குறித்த தடைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்களிப்பில் 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களில் கொன்சர்வேற்றிவ் கட்சின் 30 உறுப்பினர்களும் தொழிற்கட்சியின் 9 உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

பாராளுமன்றத்தினை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் புதிதாகப் பதவியேற்கவுள்ள பிரதமர் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று கூறப்படுகின்றது.

864 total views