2030-ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் புகைப்பிடிப்பதை நிறுத்த அரசாங்கம் உறுதி!

Report

தடுக்கக் கூடிய உடல்நல குறைபாடுகளுக்கான காரணிகளை சமாளிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் புகைப்பிடிப்பதை நிறுத்த அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

உடல் செயல்பாடுகளை ஊக்குவித்தல், தூக்கம் குறித்த வழிகாட்டுதல்களை உருவாக்குதல் மற்றும் நீரிழிவு ஆபத்து உள்ளவர்களை இலக்கு வைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு பச்சை காகிதத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கை ஆவணத்தின் ஊடாக கடந்த பல வருடங்களாக நிலவி வந்த உடல்நலக் குறைபாடுகளை கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையின் ஐந்தில் ஒரு பங்கை உடல் நலக்குறைபாட்டுக்காக செலவிடுகிறார்கள்.

குறிப்பாக, பெண்கள் 19 வருடங்களையும், ஆண்கள் 16 வருடங்களையும் தங்களின் வாழ்நாளில் நோய்களாலும், அவற்றுக்கான சிகிச்சை பெற்றுக் கொள்வதிலும் கழிக்கின்றனர்.

பின்தங்கிய பகுதிகளில் இருப்பவர்கள் நீண்ட காலமாக மோசமான உடல்நலக் குறைபாடுகளையே அனுபவிக்கின்றனர்

இந்தநிலையில், குறித்த பச்சைக் காகிதம் (green paper) எனும் ஆவணம், இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது பற்றி ஆலோசனைகளை முன்மொழிகின்றமை குறிப்பிடத்தக்கது.

பச்சைக்காகிதம் அல்லது கிறீன் பேப்பர் என்பது (இங்கிலாந்தில்) விவாதத்தைத் தூண்டும் பொருட்டு வெளியிடப்பட்ட அரசாங்க திட்டங்களின் ஆரம்ப அறிக்கையாகும்.

1092 total views