சிரியாவில் இவர்கள் செய்யும் குற்றங்களுக்கு கடவுள் பழிவாங்குவார்!

Report

இட்லிப் மாகணத்தில் ரஷ்ய அதிபர் புதினும், சிரிய அதிபர் ஆசாத்தும் செய்யும் குற்றங்களுக்காக கடவுள் நிச்சயம் பழிவாங்குவார் மீட்புப் பணி வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்கள் தரப்பில், சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் திங்கட்கிழமை சிரியா மற்றும் ரஷ்யப் படைகள் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது.

இதில் இட்லிப் மாகாணத்தில் உள்ள மாரட் அல் நுமன் நகரத்தில் உள்ள சந்தையில் பொதுமக்கள் 36 பேர் பலியாகினர் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மோசமான தாக்குதல் குறித்து மீட்புப் பணி வீரர் ஒருவர் கூறும்போது, இங்கு சாலைகள் முழுவதும் பிணங்கள் கிடக்கின்றன. நிச்சயம் கடவுள் ஆசாத்தையும், ரஷ்யாவையும் பழிவாங்குவார் என்று தெரிவித்தார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

1995 total views