சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும் ஆற்று வெள்ளம்

Report

சுவிட்சர்லாந்தில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கழிவுநீர் கலந்த வெள்ளம், கரையோரம் இருந்த திராட்சை தோட்டத்துக்குள் புகுந்தது. அந்நாட்டின் ஆல்ப் மலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு, ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாமோசன் டவுனில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காரில் சென்ற 6 வயது சிறுமி உட்பட 2 பேர் மாயமாகினர்.

அவர்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில், தொடர் மழையில் நிரம்பி வழிந்த லாசென்ட்சே ஆற்றில், கழிவுநீர் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீரின் வேகத்தில் கரையோரம் இருந்த திராட்சை தோட்டத்தில் வெள்ளம் புகுந்து தோட்டத்தை சேதப்படுத்தியதோடு, அதன் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலமும் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சேதமடைந்தன.

1284 total views