ஓடுதளத்தை கடந்து தரையை உரசி சென்ற விமானம்

Report

ரஷ்யாவில் ஓடுபாதையை கடந்து, தரையை உரசியபடி வானில் பறந்த பயணிகள் விமானத்தின் காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள டோமோடெடோவோ விமான நிலையத்தில், நேற்று அதிகாலை 150 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. விமானம் நேராக ஓடுதளத்திற்கு வந்தும், நேராக வான் நோக்கி எழும்பாமல், ஓடுதளத்தை கடந்து தரையை உரசி புழுதியை கிளப்பியபடி மேலே பறந்தது.

இந்த பதர வகைக்கும் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் தற்போது வெளியாகி காண்போரை அச்சத்தில் உரைய செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விமான நிறுவனம், ஓடுதளத்தை கடந்து தரையை உரசியபடி சென்ற விமானம் நிர்ணயித்தபடி கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் விமான நிலையத்தில்((Simferopol airport)) பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டதாகவும், இதனால் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தது.

336 total views