விமானத்தில் தனித்து பயணிக்கும் பயணி..!

Report

அமெரிக்காவில், மிகப்பெரிய பயணிகள் விமானத்தில், தனித்து பயணிக்கும் வாய்ப்பு பயணி ஒருவருக்கு கிடைத்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த வின்சென்ட் பியோன் (Vincent Peone) என்பவர், திரைப்பட எழுத்தாளர் மற்றும் இயக்குனராக உள்ளார்.

இவர் அண்மையில் கொலரடோ மாநிலத்தில் உள்ள ஆஸ்பென் என்ற இடத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் உப்பு ஏரி அமைந்துள்ள உட்டா (utah) நகர் வழியாக வீடு திரும்ப விமான டிக்கெட் முன்பதிவு செய்தார்.

குறிப்பிட்ட அந்த டெல்டா விமானத்தில் அவர் மட்டுமே முன்பதிவு செய்திருந்த நிலையில், சில காரணங்களால் அவரது விமான சேவை தாமதமாக்கப்பட்டது.

.இதனால் அந்த விமானத்தில் பயணிக்க யாரும் பயணச்சீட்டு வாங்காத நிலையில், இறுதியாக விமானத்தில் வின்சென்ட் மட்டுமே பயணிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அரிய வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் விமானத்தில் ஏறிய வின்சென்ட், விமானி இருக்கும் காக்பிட் சென்று விமானியுடன் கைக்குலுக்கினார்.

தனிவிமானத்தில் பயணித்தது போன்ற இந்த அனுபவத்தை அவர் தற்போது வீடியோவுடன் டுவிட்டரில் பதிவிட்டு, பாராட்டுகளை பெற்றுவருகிறார்.

757 total views