அமெரிக்க விழாவில் பிரியங்கா சோப்ராவை விமர்சித்த பாகிஸ்தான் பெண்!

Report

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த காலக்கட்டத்தில் போரை ஆதரித்தார் திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸில் சோப்ரா இடம்பெறும் அழகு மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பிரியங்கா சோப்ராவை கபடதாரி என அழைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிரியங்கா, "Jai Hind #Indian Armed Forces", என ட்வீட் செய்திருந்தார்.அந்த சமயத்தில் இருநாடுகளுக்கு இடையே போர் வரலாம் என்ற அளவுக்கு பதற்றம் நிலவியது.

அமெரிக்காவில் நடந்த ப்யூட்டிகான் விழாவில் ப்ரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் பெண்ணான் ஆயிஷா மாலிக் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் பேசிய ஆயிஷா, நீங்கள் (சோப்ரா) மனிதநேயம் குறித்து பேசுவது எனக்கு வியப்பாக உள்ளது.

உங்கள் பக்கத்து நாட்டை சேர்ந்த பாகிஸ்தானியான எனக்கு தெரியும், நீங்கள் ஒரு கபட வேடதாரி என்று பேசி உள்ளார். அந்தக் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் நீங்கள் அமைத்திக்கான யூனிசெஃப்பின் தூதர். ஆனால், நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத யுத்தத்தை ஆதரிக்கிறீர்கள்.

இந்த மாதிரியான யுத்தத்தில் யாரும் வெல்லப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.

3255 total views