பெரு கடல் பகுதியில் கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலம்!

Report

பெரு நாட்டில் லாம்பேகியூ பகுதியில் கடற்கரை ஓரத்தில் சிக்கி தவித்த திமிங்கலத்தை விலங்கு நல ஆர்வலர்கள் கடலுக்குள் தள்ளி அதன் உயிரை காப்பாற்றினர்.

ஹம்ப்பேக் வகையை சேர்ந்த இந்த திமிங்கலம் 10 மீட்டர் நீளமும், ஆறரை டன் எடையும் கொண்டதாகும்.

கடலில் ஏற்பட்ட பெரிய அலையில் சிக்கிய இந்த திமிங்கலம் கடற்கரை ஓர மணல் பகுதியில் சிக்கி கொண்டது.

இதனை கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து அந்த திமிங்கலத்தை மணலில் இருந்து இழுத்து சென்று கடலில் தள்ளி விட்டனர். கடந்த 15 நாட்களில் மட்டும் பெரு கடற்கரையில் கரை ஒதுங்கிய 2வது பெரிய திமிங்கலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2029 total views