ஹாங்காங் எல்லையை நோக்கி சீனா படைகளைக் குவிக்கிறது!

Report

ஹாங்காங் எல்லையை நோக்கி தனது படைகளை சீனா குவித்து வருவதை உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னர், ஆங்கிலேய காலனியாதிக்க பிரதேசமாக இருந்த ஹாங்காங்கில், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு மாற்றம் செய்யும் அரசின் முடிவு மக்களிடையே கொந்தளிப்பை உருவாகியுள்ளது.

ஹாங்காக் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலகக் கோரி போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.

இந்நிலையில், சீனா தனது படைகளை ஹாங்காக் எல்லையில் நிறுத்தியிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

933 total views