10 நாட்களுக்கு பின் ஆடைகளின்றி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் சடலம்!

Report

மலேசியாவில் கடந்த 10 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி, அவர் தங்கியிருந்த விடுதி அருகியிலுள்ள வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அயர்லாந்தை சேர்ந்தவர் 15 வயதான சிறுமி நோரா ஆனி குய்ரின், மனநலம் குறைபாடுள்ள அவர் விடுமுறையை கழிக்க பெற்றோருடன் மலேசியாவுக்கு சென்றார்.

அங்கு செரெம்பன் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சிறுமி, கடந்த 4-ம் ஆம் தேதி திடீரென விடுதியிலிருந்து மாயமானார்.

அவரை பல இடங்களில் தேடிய பெற்றோர் இறுதியாக பொலிஸில் புகார் செய்தனர். இந்நிலையில் தீவிர தேடுதலின்போது, விடுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள வனப்பகுதியில் நீரோடை அருகே இளம்பெண் ஒருவரது சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஆடைகளின்றி இருந்த அந்த சடலம் நோராவுடையது என அவரது பெற்றோர் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். சிறுமி எப்படி இறந்தார், அவர் வனப்பகுதிக்கு எவ்வாறு சென்றார் உள்ளிட்ட சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1245 total views