பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் பங்கேற்ற காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மனைவி! வைரல் செய்தி

Report

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரின் மனைவி பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரும், பிரவினைவாதியுமான முகமது யாசின் மாலிக் தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது உள்ளிட்ட் புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், முகமது யாசின் மாலிக்கின் மனைவி மஷால் மாவிக், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று பாகிஸ்தான் தேசியக் கொடி கொடியேற்று விழாவில் உரையாற்றியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இது தொடர்பான தகவலை என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

378 total views