தென்கொரியாவில் 15 மாடி கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 3 பேர் பலி!

Report

தென்கொரியாவில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், இங்கு ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கட்டிடத்தின் மேல் தளமான 15-வது மாடியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் கீழே இறங்குவதற்காக லிப்டில் ஏறினர்.

சற்றும் எதிர்பாராத வகையில் அந்த லிப்ட் அறுந்து 15-வது மாடியில் இருந்து கீழே விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. கட்டுமான பணிகளை நிறுத்திவைத்துள்ள பொலிஸார் பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

349 total views