உலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்

Report

டென்மார்க் நாட்­டி­ட­மி­ருந்து கிரீன்­லாந்தை விலைக்கு வாங்க அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக வோல் ஸ் ரீட் ஜேர்னல் செய்தி நிறு­வனம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

ட்ரம்ப் அடுத்த மாதம் உத்­தி­யோ­க­பூர்வ பயணம் மேற்­கொண்டு டென்மார்க் செல்­ல­வுள்ள நிலை­யிலே இந்த செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

வடக்கு அத்­தி­லாந்திக் மற்றும் ஆட்டிக் பெருங்­க­டல்­க­ளுக்­கி­டையே 8 இலட்­சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அள­வி­லான பரப்பை உள்­ள­டக்­கி­ய­தாக இத் தீவு காணப்­ப­டு­கின்­றது. முற்­றிலும் பனிப்­பி­ர­தே­ச­மான இந்த தீவு டென்­மார்க்கின் ஒரு தன்­னாட்சி பிர­தே­ச­மாகும்.

மேலும், அமெ­ரிக்க இரா­ணு­வத்­திற்கு சொந்­த­மான விமான தளம் ஒன்று கிரீன்­லாந்து தீவில் இயங்கி வரு­வ­தா­கவும் நாட்டின் முக்­கிய ரேடார் மைய­மாக இருக்கும் இந்த தளத்தில் 600 வீரர்கள் உள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இதே போன்று 1946ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஹாரி ட்ரூமன் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு கிரீன்­லாந்து தீவை வாங்க முற்­பட்டார் எனவும் ஆனால் அவ­ரது அந்த பேச்­சு­வார்த்தை நிரா­க­ரிக்­கப்­பட்­டது என்றும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

ஆனால், இந்த யோச­னைக்கு முற்­றாக மறுப்புத் தெரி­வித்­துள்ள கிரீன்லாந்து அரசாங்கம் 'நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல.' என்று கூறியுள்ளது.

5933 total views