உலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் !!

Report

உலகின் மிக அழகான ஆண் நடிகர் யார் என்ற ஓட்டெடுப்பில், உலகப் புகழ் பெற்ற பல ஆண் பிரமுகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதற்காக, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், உலகின் மிக அழகான மனிதரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியை ஓட்டெடுப்பு மூலம் நடத்தியது. இதில், பல முன்னணி ஹாலிவுட் நடிகர்களையும் போட்டியில் கொண்டு வந்திருந்தது அந்த நிறுவனம். இதில், இந்திய நடிகர் ஹிருத்திக் ரோஷன், மற்றவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இது குறித்து ஹிருத்திக் ரோஷனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

உலகின் மிக அழகிய ஆணாக என்னை தேர்ந்தெடுத்ததற்காக, எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முகத்தின் அழகை வைத்து அழகான ஆணை தேர்வு செய்கின்றனர். உண்மையில், நல்ல மனிதராக நடந்து கொள்வதும்; நல்ல குணத்தோடும்; மனிதாபிமானத்தோடு இருப்பதுதான், ஒவ்வொருவருக்குமே அழகு. அப்படிப்பட்ட தகுதிகளோடு நான் இருப்பதாகவே உணருகிறேன். எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவராக தோன்றினால், அதுவே உங்களை அழகானவராக காண்பிக்கும். அதனால், ஒவ்வொருவரும் நல்ல குணத்தோடு இருந்தாலே அழகுதான்.

இவ்வாறு ஹிருத்திக் கூறியிருக்கிறார்.

1449 total views