உணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..!

Report

பிரான்ஸ் உணவகம் ஒன்றில், ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டுவரப்பட்டதால் கொடூர பசியில் இருந்த வாடிக்கையாளர் ‘வெயிட்டரை’ சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

பாரீஸில் நாயிசி-லீ-கிராண்ட் (Noisy-le-Grand) எனும் இடத்தில் உள்ள ‘பீசா மற்றும் சான்ட்விச்’ கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சான்ட்விச் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டரை எடுத்த உணவக ஊழியர் (waiter) வெகு தாமதமாகவே உணவை தயார் செய்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் பசியில் இருந்த வாடிக்கையாளர், வெயிட்டரை சரமாரியாக திட்டியதோடு, தான் வைத்திருந்த துப்பாக்கியால் உணவக ஊழியரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்த சக வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக ஊழியர்களை அச்சத்தில் உறைய செய்தது.

இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார், படுகாயத்துடன் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்த ஊழியரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க முயன்றும் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய வாடிக்கையாளரை தேடி வருகின்றனர்.

1151 total views