மலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை

Report

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதற்கு மலேசியாவிலுள்ள இரு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. ஒரு மாநிலத்தில் அவர் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்தியாவால் தேடப்படும் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தரக் குடியுரிமை அளித்துள்ளது. இந்நிலையில் அங்கு அண்மையில் உரையாற்றிய அவர், மகாதீரை ஆதரிக்காமல், இந்தியப் பிரதமர் மலேசிய இந்துக்கள் அந்நாட்டுப் பிரதமர் துன்மகாதீரை ஆதரிக்காமல், நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து இன ரீதியாக கருத்து தெரிவித்த ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து நாடுகடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் புதிய விருந்தாளியான தாம், மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என சில தரப்பினர் விரும்புகிறார்கள் எனில், தமக்கு முன்பே மலேசியாவிற்கு விருந்தினராக வந்த சீனர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார் ஜாகிர் நாயக்.

இதனால் அவருக்கான எதிர்ப்பு மேலும் வலுத்துள்ளது. இதனிடையே ஜாகீர் நாயக்கிடம் கடந்த வெள்ளிக்கிழமை மலேசிய போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் எந்த நிகழ்ச்சியிலும் உரையாற்றக் கூடாது என பெர்லிஸ், கெடா ஆகிய இரு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. மேலும் சரவாக் மாநிலம் ஒருபடி மேலே சென்று, ஜாகிர் நாயக் அம்மாநிலத்தில் நுழைவதற்கே தடை விதித்துள்ளது.

மலேசிய மக்கள் மத்தியில் நிலவும் அமைதியும் நல்லிணக்கணமும் நீடிப்பதே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள கெடா மாநில நிர்வாகம், எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதன் மூலம் தீயை இன்னும் பெரிதாக்கி விடக்கூடாது என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ மர்சுகி யாயா, ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக மலேசிய அமைச்சரவை ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார்.

1017 total views