சீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி

Report

சீனாவில் சர்வதேச விமானக் கண்காட்சியில் நிகழ்த்தப்பட்ட, பல்வேறு ரக விமானங்கள் மற்றும் பாராகிளைடிங் சாகசங்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். சீனாவின் லியானிங் (Liaoning Province) மாகாண தலைநகரில், 8ஆவது ஷென்யாங் (Shenyang) சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு நாடுகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட பல ரக விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியின் போது வான் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஃபைட்டர் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பாராகிளைடிங் வீரர்கள் வானில் தலை கீழாக பறந்தும், வட்டமடித்தும் சாகங்களில் ஈடுபட்டனர். இதனை அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

1315 total views