குகைக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்க 24 வீரர்கள் போராட்டம்

Report

போலாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்க 24 வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போலாந்தில் உள்ள தத்ரா மலைப்பகுதிக்கு சிலர் குழுவாக பயணித்துள்ளனர். அவர்களுள் இரண்டு பேர் அந்த மலைப்பகுதியில் மிகவும் நீளமான மற்றும் ஆழமான வீல்கா ஸ்னீஸ்னா((Wielka Sniezna)) குகைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த குகைக்கு செல்லும் குறுகிய பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், குகைக்குள் சென்றவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடன் சென்றவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

அங்கு சென்ற வீரர்கள் சிக்கிக்கொண்ட இரண்டு பேரையும் மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் மழை வெள்ளம் காரணமாக அவர்களை மீட்பது கடினமாகி உள்ளது. குகைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குகைக்குள் செல்ல வெடிப்பொருட்களை வைத்து வேறு பாதையை உருவாக்க முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 24 மீட்பு படை வீரர்கள் குகைக்குள் இருப்பவர்களை பாதுகாப்பாக மீட்க போராடி வருகின்றனர்.

அவர்களை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆனால் இதனை செய்து முடிக்க பல நாட்கள் ஆக வாய்ப்புள்ளது என்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1249 total views