போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே கலவரம்..!

Report

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பப்புவாவில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டதால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

கிழக்கு ஜாவாவில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பப்புவான் மாணவர்கள் தடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கலவரம் ஏற்பட்டது. போலீஸ் உயர் அதிகாரியின் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத போராட்டக்காரர்கள், உள்ளூர் நாடாளுமன்ற கட்டட்டத்துக்கு தீவைத்ததுடன் எரியூட்டப்பட்ட டயர்களை சாலைகளில் உருட்டிவிட்டனர்.

தங்கள் மீது கண்ணீர் புகை வீச்சு நடத்திய போலீசார் மீது கற்களை எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி கொண்டாடப்பட்ட சுதந்திரதினத்தில் விடுதி ஒன்று முன் ஏற்றப்பட்ட கொடி கம்பம் வளைக்கப்பட்டதே கலவரத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. பப்புவாவில் பிரிவினைவாத அமைப்பு ஒன்று பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பாதுகாப்புப் படையினர் மீதும் தொடர்ந்து மனித உரிமை மீறல் புகார்கள் சுமத்தப்படுகிறது.

1121 total views