ஹாங்காங்கில் நடக்கும் தொடர் போராட்டத்தால் டாக்சி ஓட்டுநர்கள் பாதிப்பு

Report

ஹாங்காங்கில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் அங்குள்ள டாக்சி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதமாக வருமானம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வீதம் 18 ஆண்டுகளாக டாக்சி ஓட்டும் ங் சுங்வாய், ((Ng Chung-wai)) போராட்டக்காரர்களால் தனது வருமானம் சுருங்கிவிட்டதாக தெரிவிக்கிறார். இதற்கு முன் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்ததாகவும் தற்போது 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும் கடந்த மாதத்தை விட 40 சதவீதம் வருமானம் குறைந்து விட்டதாகவும் அவர் கூறுகிறார்.

ஹாங்காங்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சீனாவில் விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை முற்றிலும் கைவிட வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டுள்ளன. ஹாங்காங் முழுவதும் 18 ஆயிரம் டாக்சிகள், 60 ஆயிரம் ஓட்டுநர்கள் உள்ளதாகவும் அவர்களிடம் இருந்து இதுவரை 3 ஆயிரம் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையும் 30 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் கூறுகிறது.

1044 total views