மனிதர்களை போலவே மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள்!

Report

பறத்தல், தாவுதல், ஓடுதல், நீந்துதல் முதல் மூளை அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளக் கூடிய ரோபோக்கள் சீனாவில் நடைபெற்று வரும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெய்ஜிங்கில் நேற்று தொடங்கிய ரோபோ மாநாடு வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், உளவு, உணவு, மருத்துவம் உள்ளிட்ட 21 தொழிற்துறைகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் மருத்துவத்துறையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ரோபோக்கள், பல கால்களைக் கொண்ட நாய் போன்ற உதவும் தன்மை கொண்ட ரோபோக்கள், 5 கிலோ வரையான எடையைத் தூக்கக் கூடிய ரோபோ கைகள், பியானோ வாசிக்கும் ரோபோக்கள், பார்களில் மது விநியோகிக்கும் ரோபோக்கள், குழந்தைகளிடம் தோழமை பாராட்டி விளையாடும் ரோபோக்கள், அரை கிலோ எடையுடன் 20 நிமிடங்கள் பறக்கக் கூடிய ரோபோ பறவை, நீரில் நீந்தும் மீன், உளவுத்துறையில் ஈடுபடக்கூடிய ரோபோக்கள் இடம் பெற்றுள்ளன.

22 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

897 total views