ரஷ்யாவை உளவுப் பார்க்க தயாராகும் புதிய வகை ட்ரோன் விமானம்!

Report

ரஷ்யாவை உளவுப் பார்க்கும் புதிய வகை ட்ரோன் விமானத்தை வெற்றிக்கரமாக சோதனை செய்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் காணொளி வெளியிட்டுள்ளது.

சுமார், 6 டன் எடையுள்ள ட்ரோன் அல்டியஸ் யூ(drone Altius-U)வகை விமானம் 800 மீட்டர் உயரத்தில் 30 நிமிடம் பறந்து பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

உளவு பார்ப்பதற்காக அதில் பொருத்தப்பட்டுள்ள ட்ரோன் அமைப்பும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது குறித்து, தனது யூடுயூப்பில் காணொளி பதிவிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்த ட்ரோன் விமானத்தால் 24 மணி நேரம் காற்றில் மிதக்கமுடியும் என்று தெரிவித்துள்ளது.

முழு அளவிலான உளவுப் பணிகளை நிறைவேற்றுவதற்கும், ஆப்டிகல், ரேடியோ-தொழில்நுட்பம் மற்றும் ரேடார் கருவிகளை நிர்வகிப்பதற்கும் இது பயன்படும் என்றும் கூறியுள்ளது.

2701 total views