அமேசான் மழைக்காடுகளில் வரலாற்று காட்டு தீ நிகழ்வு!

Report

புவி வெப்பமடைதலை எதிர் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இது 83 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத் தீ கண்டறியப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

நாட்டில் பல பகுதிகளில் புகையால் சூழப்பட்டுள்ள நிலையில் மனாஸ் நகரில் சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையும், பெரு நகரில் சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலையில் காட்டுத் தீ பரவுவது இயல்பு தான் என்ற போதிலும் சில விவசாயிகள் பண்ணைகள் அமைப்பதற்காக வேண்டு மென்றே தீ வைத்து சட்டவிரோதமாக காடுகளை அழித்து வருவதாகவும் பிரேசில் அதிபர் ஜைர் போல்சோனரோவின் சுற்றுச்சூழல் கொள்கையினால் காட்டு த்தீ ஏற்படுவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

393 total views